

உலக பொப்பிசை சக்கரவர்த்தியாகக் கருதப்பட்ட மைக்கல் ஜெக்சன் மாரடைப்பினால் காலமானார். அமெரக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹோல்ம்பி ஹில்ஸ் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட இருதய கோளாறினால் மைக்கல் ஜெக்சன் உயிர் பிரிந்தததாக அவரது சகோதரர் ரென்டி ஜெக்சன் தெரிவித்துள்ளார்.
இன்டியானாவின் உருக்குத் தொழிலாளியான ஜோ ஜெக்சனுக்கும், கத்தரினுக்கும் 1958ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி மைக்கல் ஜெக்சன் பிறந்தார். மைக்கல் ஜெக்சன் தனது ஆறு வயதில் சகோதரர்களுடன் இசைப் பயணத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முதலாக தனது 11 ஆவது வயதில் தொலைக்காட்சி இசை நிகழ்வொன்றில் மைக்கல் ஜெக்சன் தோன்றினார்.
உலகப் புகழ்பெற்ற மற்றுமொரு பாடகர் எல்விஸ் பிரிஸ்லியன் புதல்வியை 1994ம் ஆண்டு மைக்கல் ஜெக்சன் கரம்பிடித்தார்.
எனினும், அந்த திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. பின்னர் மற்றுமொரு நடிகையை ஜெக்சன் திருமணம் முடித்தார். எனினும் அந்த திருமண பந்தமும் நீண்டகாலம் நீடிக்கவில்லை.
மைக்கல் ஜெக்சன், பிரின்ஸ் மைக்கல் 1, பிரின்ஸ் மைக்கல் 2 மற்றும் பரிஸ் என மூன்று குழந்தைச் செல்வங்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான இசைக் கலைஞராக மைக்கல் ஜெக்சன் கருதப்படுகின்றார்.
மைககல் ஜெக்சனின், ஒப் த வோல், திரில்லர் மற்றும் பேட் போன்ற இசை ஆல்பங்கள் உலகில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட இசை அல்பங்களாக கருதப்படுகின்றன.
எதிர்வரும் மாதம் லண்டனில் நடைபெறவிருந்த இசை நிகழ்வுகளுக்கான டிக்கட்டுகள் நான்கே மணித்தியாலங்களில் விற்றுத் தீர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் சுமார் 75000 டிக்கட்டுகள் நான்கு மணித்தியாலங்களில் விற்று தீர்க்கப்பட்டன. நிற, மொழி, சமய பேதங்களை களைந்து, சமகால உலக இசை வரலாற்றில் தனக்கென ஓர் தனியான இடத்தை பதிவு செய்து கொண்டுள்ள மைக்கல் ஜெக்சனின் மரணம் அத்துனை இசைப் பிரியர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மைக்கல் ஜெக்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஓர் இசைக் கலைஞன் என்ற ரீதியில் சர்வதேச ரீதியாக அவரது திறமை அபரிமிதமானதென்பதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது,
<<< முன்செல்ல