

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள் கனடாவில் வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 46 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்னச் சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக் கணக்கான
சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் வெள்ளை மாளிகைக்கு முன்னர் நடத்தப்படும் இப்போராட்டமானது மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. அத்துடன் வேற்றின மக்களுக்கும் ஈழத்தமிழர் நிலை குறித்து விழங்கப்படுத்தப்படுகிறது.


